கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.

Update: 2021-07-05 14:45 GMT

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் 

தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் தூத்துக்குடி மாவட்டத்தில் 18, 45 வயதிற்க்கு மேற்பட்டோர் உட்பட முன்கள பணியாளர்கள் என அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது NTAGI மற்றும் NEGVAC போன்ற தேசிய அறிஞர் குழுவின் பரிந்துரையின் படியும், மத்திய அரசின் செயல்பாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படியும் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி அரசு மருததுவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது.

இதனை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் தங்களின் கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும், அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களில் (CVC) Cowin வலைதளத்தில் பதிவு செய்துகொண்டோ அல்லது அருகில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்துகொண்டோ தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநகராட்சி அணையர் சாருஸ்ரீ கூறுகையில்: இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதற்கட்டமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 16கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே கர்ப்பிணி தாய்மார்கள் அவர்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் நலன் கருதி கொரொனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமானது முதற்கட்டமாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படும் 20வாரங்களுக்கு மேல் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே கர்ப்பிணி தாய்மார்கள் முழு ஒத்துழைப்பு தந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

Tags:    

Similar News