தமிழக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-22 07:12 GMT

தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுகவில் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமல்படுத்தாத நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாதது அரசு ஊழிர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியருக்கான சரண்டர் விடுப்பு குறித்தும் எவ்வித அறிவிப்பும் சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை என்பதை கண்டித்தும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சாதமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாததை கண்டித்து அவர்கள் முழக்கங்ளை எழுப்பினர்.

இதுதொடர்பாக, கல்லூரி பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:

திமுக அரசை கண்டித்து மார்ச் 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், 28 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திலும், ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாகவும் கந்தசாமி தெரிவித்தார்.

Tags:    

Similar News