தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளங்கலை மீன்வளப் படிப்பிற்கான வகுப்புகள் தொடக்கம்..

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வியாண்டு இளங்கலை மீன்வளப் படிப்பிற்கான வகுப்புகள் இன்று தொடங்கியது.

Update: 2022-12-07 15:08 GMT

இளங்கலை மீன்வளப் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மீன்வள அறிவியல், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல் என பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் மீன்வளப் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மீன்வளர்ப்பில் புதிதாக பல்வேறு தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில் மாதம் தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி அலங்கார மீன் வளர்ப்பு, இறான் மீன் கொழுக்க வைத்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஆண்டுதோறும் உலக அறிவியல் தினம், உலக சுனாமி விழிப்புணர்வு தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்பிற்கான வகுப்புகள் இன்று தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவங்கியது. இந்த கல்வியாண்டில் பொதுக் கலந்தாய்வு மூலமாக 49 புதிய மாணவர்கள் (15 ஆண்கள் மற்றும் 34 பெண்கள்) மீன்வளக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

புதிய மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சி, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இன்று நடைபெற்றறது. நிகழ்ச்சிக்கு, மீன்வளக் கல்லூரி முதல்வர் அகிலன் தலைமையேற்று அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை வரவேற்று கல்லூரி பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் 2022-23 ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ஆதித்தன் செய்திருந்ததோதோடு, கல்விமுறை விதிகள் பற்றியும், மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை பற்றியும் எடுத்துரைத்தார்.

கல்லூரி மாணவர் விடுதியின் காப்பாளரும், பேராசிரியருமான பத்மாவதி, மாணவர் விடுதியின் சட்டத் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும், கல்லூரியின் மாணவர் பேரவையின் துணைத் தலைவரும் பேராசிரியருான ஆதித்தன் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் குறித்து பேசினார்.

அனைத்து புதிய மாணவர்களும் தங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பெற்றோர்களுக்கான கேள்வி-பதில் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் பெற்றோர்களது சந்தேகங்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News