தூத்துக்குடியில் இரவு நேரத்தில் திடீரென ரோந்து மேற்கொண்ட எஸ்.பி.

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று இரவு திடீரென ரோந்து சென்று போலீசாரின் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.

Update: 2023-05-09 14:53 GMT

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றது முதல் பாலாஜி சரவணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கண்காணித்து தடுக்க தனிப்படைகள் அமைத்துள்ளார்.

மேலும், புகையிலைப் பொருட்கள் கடத்தல், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் இரவு நேரத்தில் சைக்களில் சென்று திடீரென ரோந்து பணி மேற்கொள்வது மற்றும் இரவு நேர போலீசாரின் செயல்பாடுகளை ரகசியமாக சென்று கண்காணிப்பது போன்ற பணிகளிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஈடுபட்டுள்ளார்.


இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இன்று (09.05.2023) தூத்துக்குடி குரூஸ் பர்னானந்து சிலை சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில், ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரோந்து சென்று காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள ரோந்துப் பணிகள் மற்றும் வாகன தணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன், போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்கள் நாகராஜ், சதீஷ்குமார், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகிலரசன், தூத்துக்குடி நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகன சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News