இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் பைபர் படகுடன் பறிமுதல்: ஒருவர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் சிக்கியது. இது தாெடர்பாக ஒருவர் கைது, பைபர் படகு பறிமுதல்.

Update: 2021-09-23 10:33 GMT

தூத்துக்குடியில் பாேலீசாரால் கைது செய்யப்பட்ட முகம்மது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் மஞ்சள் சிக்கியது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மஞ்சள் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகேயுள்ள வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் நேற்று இரவு கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி, தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின், தலைமைக் காவலர்கள் ராமர், இருதய ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது கடற்கரையில் நின்ற பைபர் படகை போலீசார் சோதனையிட்டனர். அதில் 18 சாக்கு மூடைகளில் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. மேலும் கடற்கரையில் 32 மூடைகளில் மஞ்சள் இருந்தது. இதில் 50மூட்டைகளில் மொத்தம் 2,000 கிலோ மஞ்சள் இருந்தது. இதனை படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக திரேஸ்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் முகம்மது (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 டன் மஞ்சள் மற்றும் பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News