டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-05-01 03:15 GMT

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீது வரி குறைப்பு செய்திடவும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக தமிழகத்தில உள்ள மாநகராட்சிகளில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து 100க்கும் மேற்ப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி கைகளில் பதாகைகளை எந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன்,  வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர்  பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.


Tags:    

Similar News