தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்: கனிமொழி எம்பி திறப்பு

தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை காணொளி காட்சி மூலம் கனிமொழி எம்பி திறப்பு.

Update: 2021-10-07 11:31 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை காணொளி காட்சி மூலம் கனிமொழி எம்பி இன்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகளில் ஆக்ஸிஜன் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்யும் வித்ததில் ரூ. 1 கோடி மதிப்பில் பிஎம் கேர் திட்டத்தில் கட்டப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் காணொளி காட்சி மூலம் கனிமொழி எம்பி இன்று திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று படுக்கைகளில் ஆக்ஸிஜன் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்யும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை மருத்துவமனை முதல்வர் நேரு தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவ துறையினரும் மக்களும் அதிகமான உயிர்க்காற்று (ஆக்ஸிஜன் - OXYGEN) தேவையின் காரணமாக பல இன்னல்களை சந்தித்தது நாடு அறிந்த ஒன்று. அனைத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி இன்னும் நோய்த்தொற்றுகளும் உயிரழப்புகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

பெருகி வரும் ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு நாடு முழுக்க PM CARES நிதியின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் நிறுவபட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவி நிமிடத்திற்கு 1000 வரையிலான காற்று திறன் கொண்டது. இந்த கருவியானது வளிமண்டலத்தில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து (PRESURE SWING ADSORPTION ) எடுத்து 97% சுத்தமான ஆக்ஸிஜனை தயாரிக்க வல்லது. இந்த கருவியில் இருந்து உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை நேரடியாக நோயாளிக்கு கொடுக்கவோ அல்லது மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்பவோ பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த உபகரணம் வளிமண்டலத்தில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து எடுப்பதால் நெருக்கடி காலங்களில் பெரிய நிதி செலவின்றி நமது ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். நமது மருத்துவமனையில் இந்த கருவியானது PM CARES நிதியிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (DRDO) அமைப்பினால் சுமார் 1 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு இதனை நிறுவும் பணியானது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்(NHAI) மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவி நமது மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மற்றும் குழைந்தைகள் சிகிச்சைப் பிரிவில் உள்ள 200 படுகைகளின் ஆக்ஸிஜன் தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்யும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News