தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-02 06:17 GMT

தூத்துக்குடியில் 14 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நிலையில் "அ" பிரிவு கிராமத்தில் பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களில் ஓராண்டு பணி முடித்தவர்களுக்கும், "ஆ" பிரிவு கிராமத்தில் மூன்றாண்டு பணி முடித்தவர்களுக்கும் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகளைப் பரிசீலனை செய்தும் பின்பற்றியும் முதுநிலைப் பட்டியல் தயார் செய்து 29.09.2021 அன்று கிராம நிர்வாக அலுவலர்களிடையே கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

கலந்தாய்வின் முடிவின் அடிப்படையில் 14 கிராம நிர்வாக அலுவர்களுக்கு பொது இடமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அமலதாசன் கூட்டுடன்காடு கிராமத்திற்கும், உமரிகோட்டை செந்தில்குமார் குமாரகிரிக்கும், முள்ளக்காடு பகுதி-1 பாலமுருகன் மீளவிட்டான் பகுதி 1-க்கும், அய்யனடைப்பு தீபலட்சுமி சங்கரப்பேரி கிராமத்திற்கும், தளவாய்புரம் ராதா தூத்துக்குடி பகுதி 1க்கும், தெற்கு சிலுக்கன்பட்டி திரேசம்மாள் மீளவிட்டான் பகுதி 2-க்கும், வர்த்தக ரெட்டிப்பட்டி பராசக்தி தூத்துக்குடி பகுதி 2-க்கும், தூத்துக்குடி பகுதி 2 பெரியநாயகம் உமரிக்கோட்டைக்கும், கூட்டுடன்காடு நட்டார் செல்வம் தளவாய்புரத்திற்கும், குமாரகிரி சேர்மலதா திம்மராஜபுரத்திற்கும், மீளவிட்டான் பகுதி 2 ஆரோக்கிய பாத்திமா ராணி வர்த்தகரெட்டிப்பட்டி கிராமத்திற்கும், திம்மராஜபுரம் ஆனந்த் அருண் பிரகாஷ் தெற்கு சிலுக்கன்பட்டிக்கும், சங்கரபேரி எட்டு ராஜா அய்யனடைப்பு கிராமத்திற்கும், மீளவிட்டான் பகுதி 1 ராஜேஷ்கண்ணா முள்ளக்காடு பகுதி-1 கிராமத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News