பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு

தேர்தலில் பணம்,பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு

Update: 2021-04-03 05:15 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, நேர்மையான முறையில் தேர்தலை நடத்திட வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கிடா வண்ணம் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நியமனம் செய்யப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், ஏப்ரல் 1 ம் தேதி அன்று இரவு 9 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரத்திலுள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் நடமாட்டம் உள்ளதாகவும், பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாகவும் புகார் வரப்பெற்றதைத் தொடர்ந்து, பறக்கும்படையினர் மற்றும் மத்திய அரசு வருமான வரித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, வருமானவரித்துறையினர் மேற்படி முகவரியில் உள்ள வீட்டில் முழுசோதனை நடத்தினார்கள்.

இதில் மேற்படி வீட்டில் சென்னையைச் சேர்ந்த தணிகை அரசு , நடராஜன், பவுர்சிங் , தட்சணாமூர்த்தி மற்றும் டைட்டஸ்ஆகிய ஐந்து நபர்கள் தங்கியிருந்ததும், அவர்களிடம் கணக்கில் வராத தொகை ரூ.5,17,000/- இருப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையில் வேறு விபரங்கள் தெரிவிக்கப்படாததாலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததாலும் மேற்படி தொகை வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ.1,56,31,301/- ரொக்கமும்,ரூ.5,11,21,000/- மதிப்புள்ள தங்கநகைகளும், ரூ.1,45,210/- மதிப்பிலான மது பாட்டில்கள்,ரூ.1,38,650/- மதிப்புடைய கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் ரூ.2,83,587/- இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News