அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரசுப் பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தி நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-04-19 07:18 GMT

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பஜார் பகுதியில் கடந்த 19.03.2023 அன்று மதுபோதையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாது பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் திருச்செந்தூர் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்த ராகுல் வளவன் (22) என்பவரை திருச்செந்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராகுல் வளவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திருச்செந்தூர் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியை சேர்ந்த ராகுல் வளவன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் கைதான ராகுல் வளவனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News