தூத்துக்குடியில் செப்.26ல் இலவச இருதய நல சிகிச்சை முகாம்

செப்.26ல் குழந்தைகள் இருதய நல சிகிச்சை முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் திலக் மருத்துவமனையில் நடைபெறுகிறது.

Update: 2021-09-21 07:39 GMT

அப்போலோ மருத்துவமனையின் குழந்தை பிறவி இருதய நோய் மருத்துவர் நெவில் சாலமன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தூத்துக்குடியில் செப்.26ல் குழந்தைகள் இருதய நல சிகிச்சை முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது.

ராஜேஷ் திலக் மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல், மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச குழந்தைகள் இருதய சிகிச்சை முகாமானது வருகின்ற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் திலக் மருத்துவமனையில் வைத்து நடைபெறுகிறது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனையின் குழந்தை பிறவி இருதய நோய் மருத்துவர் நெவில் சாலமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடியில் உள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, லயன்ஸ் கிளப் சார்பாக வரும் ஞாயிற்றுகிழமை அன்று பிறவி இருதய நோய் சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இதில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல் ஆகிய குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை செய்யப்படும்.

அது மட்டுமின்றி குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கும் இந்த நோயிலிருந்து விடுபட சிறப்பு ஆலோசனைகளும் வழங்க உள்ளோம். இந்த முகாமானது ஞாயிற்றுகிழமை காலை 8மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. அதில் வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால் முதலமைச்சர் நல திட்டத்தில் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சென்னையில் இலவசமாக செய்ய ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறிய அவர், வரும் காலங்களில் இந்த முகாமானது தூத்துக்குடியில் உள்ள ராஜேஷ் திலக் மருத்துவமனையில் முதல் முறையாக நடைபெற உள்ளதாகவும் ஆதலால் அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக இந்த இலவச முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் இதில் முதல் அமைச்சர் நல திட்டத்தில் இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சென்னையில் இலவசமாக செய்யப்படும் என்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். பேட்டியின்போது ராஜேஷ் திலக் எம்.பி.பி.எஸ், (சேர்மன் ராஜேஷ் திலக் மருத்துவமனை), முத்துக்குமரன் DCH, MRCP, MRCPCH, CCST, (அப்பல்லோ மருத்துவமனை), மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் தூத்துக்குடி சென்ட்ரல் உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News