ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆட்சியரகத்தில் மீனவர்கள் மனு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நண்டு வலை நல சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.

Update: 2021-10-25 13:07 GMT

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி நண்டு வலை நல சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.

மாணவர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்கி தருவதற்கு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி நண்டு வலை நல சங்கத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் இன்று மனு அளித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் சிந்தாயாத்திரை சிறுதொழில் நண்டுவலை நலசங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரானிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுதொழில் நண்டு வலை நலசங்கம் சார்பில் தலைவர் சூசை மிக்கேல் தலைமையில் மீனவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக நாங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது பிரதான தொழில் மீன்பிடி தொழில் ஆகும். எங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையின் மூலமாக பல நலத்திட்டங்களை நாங்கள் பெற்று வந்தோம்.

ஆனால் கடந்த 3.5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடி கிடப்பதனால் அதன் மூலமாக எங்களுக்கு கிடைத்து வந்த நலத்திட்ட உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதன் மூலமாக எங்கள் வீட்டு பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு தகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவார்கள் என நம்புகிறோம். எனவே மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எங்களின் வாழ்வாதாரம் மேம்படவும், எங்கள் வீட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News