தூத்துக்குடியில் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

யங் இந்தியா அமைப்பு சார்பில், தூத்துக்குடியில் சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

Update: 2021-09-19 08:30 GMT

தூத்துக்குடியில், யங் இந்தியா அமைப்பின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில்,   செப்டம்பர் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை பருவநிலை மாற்றம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு 12 ம் தேதி துவங்கி கடந்த ஒரு வாரமாக மியாவாக்கி முறையில்,  தூத்துக்குடியில் யங் இந்தியா அமைப்பின் சார்பாக மரக்கன்று விநியோகம், மரம் நடுதல், சிறுவர் சிறுமியருக்கான விழிப்புணர்வு ஓவியப்போட்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விழிப்புணர்வு சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


இதன் நிறைவாக,  இன்று காலை 7 மணிக்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியை,  யங் இந்தியா அமைப்பின் தூத்துக்குடி சாப்டர் தலைவர் பொன்குமரன் பிரேம், கொடியசைத்து துவக்கிவைத்தார். ரோச் பூங்காவில் துவங்கிய பேரணி படகு குழாம் வரை சென்று திரும்பியது. சிறியவர்கள் துவங்கி பெரியவர்கள் வரை கலந்து கொண்ட பேரணியில் மரம் வளர்த்தல், வனங்களை பாதுகாத்தல், காற்று மாசடைவதை தடுக்கும் வகையில் சைக்கிள் மற்றும் எலக்ட்ரிகல் வகை மோட்டார் வாகனங்களை பயன்படுத்துதல், நெகிழி(மக்காத பிளாஸ்டிக்) பயன்பாட்டை தவிர்த்து பூமியின் வளத்தை பேணுதல் உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி யங் இந்தியா அமைப்பின் துணைத்தலைவர் சில்வியாஜான் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். பேரணியில் யங் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News