கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குப்பதிவு

Update: 2021-04-07 05:30 GMT

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 65.04 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2016 ஆம் ஆண்டு தோ்தலை விட 3.65 சதவீதம் குறைவாகும்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2016ம் ஆண்டு தோ்தலில் 68.69 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது 3.65 சதவீதம் வாக்குகள் குறைவாக 65.04 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளது.ஓட்டப்பிடாரம் தனித்தொகுதியில் மொத்தம் 2,50,717 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 1,75,043 போ் வாக்களித்தனா். இது 69.82 சதவீதம் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு தோ்தலில் இத்தொகுதியில் 72.38 சதவீத வாக்குகள் பதிவானது. தற்போது, அதைவிட 2.56 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.கோவில்பட்டி தொகுதியில் 67.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. கோவில்பட்டி தொகுதியில் 86,206 ஆண் வாக்காளா்கள், 93,064 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 6 போ் என மொத்தம் 1,79,276 போ் வாக்களித்தனா். 

Tags:    

Similar News