தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் பேரிடர் ஒத்திகை பயிற்சி

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

Update: 2021-09-09 17:24 GMT

தூத்துக்குடியில் நடந்த பேரிடர் மீட்பு ஓத்திகை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை மற்றும் வருவாய் பேரிடர் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடர்பாக பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி இன்று (09.09.2021) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது: வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் பேரிடரின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைக நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்


தமிழகம் முழுவதும் பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்த தீயணைப்பு-மீட்பு பணித் துறை இயக்குநர் கரன்சின்கா, உத்தரவின் பேரில், தென் மண்டல துணை இயக்குநர் ந.விஜயகுமார் அவர்களது ஆலோசனையின் பேரில் வருவாய் துறையினருடன் தீயணைப்பு-மீட்பு பணி துறையினர் இனைந்து பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று நடத்தப்பட்டது.

இதில் பேரிடர் மற்றும் அவசர காலங்களில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தங்களை வெள்ள அபாயங்களிலிருந்து காப்பாற்ற உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தீயணைணப்பு-மீட்பு பணித் துறையின் மீட்பு உபகரணங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. மீட்பு உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் அவைகளின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

தீயணைப்பு-மீட்பு பணித் துறைக்கு வழங்கப்பட்ட இஞ்சினுடன் கூடிய இரப்பர் படகுகளில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை பணியாளர்கள் கடலுக்கு சென்று கடலில் சிகியவர்களை மீட்கும் செயல்முறை விளக்க பயிற்சிகளும் தூத்துக்குடி நிலைய பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு-மீட்பு பணித்துறையின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த கமாண்டோ தீயணைப்போர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.

வருவாய் துறை மற்றும் தீயணைப்பு-மீட்பு பணி துறை மூலம் மாவட்டம் முழுவதும் இதுபோன்று பேரிடர் போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு-மீட்பு பணித் துறை தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ச.குமார், உதவி மாவட்ட அலுவலர் த.முத்துபாண்டியன், நிலைய அலுவலர்கள் ஜோ.சகயாராஜ், து.அருள் ராஜ், ம.சுந்தர் ராஜ் மற்றும்; பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News