தூத்துக்குடியில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-13 15:48 GMT

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அன்மைகாலமாக பாதாளச்சாக்கடை மூடிகள் தொடர்ந்து திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கு மண்டல துணை ஆணையர் சேகர் தலைமையில், இணை ஆணையர் சந்திரமோகன் முன்னிலையில் பழைய இரும்பு வியாபாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் மாநகர பகுதிகளை சார்ந்த 15க்கும் மேற்பட்ட பழைய இரும்பு வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் அண்மைகாலமாக பாதாளச்சாக்கடை மூடிகள் தொடர்ந்து திருட்டு போகும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருவதை அதிகாரிகள் சுட்டிக் காட்டினார்கள்.

அவ்வாறு பாதாளச்சாக்கடை மூடிகள் விற்க வரும் நபர்கள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் அளிக்குமாறு அவர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News