சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Update: 2021-04-17 06:00 GMT

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்களில் விழாக்கள் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கொடியேற்றும் நிகழ்ச்சியானது மிக எளிமையாக நடத்தபட்டது.

இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.கொடி மரம் முன் சுவாமி சங்கரராமேஸ்வரர்,அம்பாள் பாகம்பிரியாள் அலங்கரித்து வைக்கப்பட்டு கலச கும்பங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டன. தொடர்ந்து மூலஸ்தானம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு தீபாராதனைகள் முடிந்த பின்பு பக்தர்கள் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து தினசரி காலை, மாலை 2 வேளையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். சுவாமி, அம்பாள் சப்பர பவனி கோவில் மாடவீதிகளில் நடைபெறும்.சித்திரை திருவிழா 10 நாள் கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News