மம்தாபானர்ஜியை கண்டித்து தூத்துக்குடியில் பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்

மேற்கு வங்காள கலவரம் திரிணாமூல் காங்கிரஸ், மம்தா பானர்ஜியை கண்டித்து :- தூத்துக்குடியில் பாரதீய ஜனதா கட்சினர் ஆர்ப்பாட்டம்.

Update: 2021-05-06 01:02 GMT

அண்மையில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்குவங்கத்தில் பயங்கர கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த கலவரத்தில் பலரது கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நெறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும், பாஜகவினரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர்‌ குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியையும், அதை கண்டிக்காத மம்தா பானர்ஜியையும் கண்டித்து நாடு முழவதும்‌ பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்க அரசையும், மம்தாபானர்ஜியையும் கண்டித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 100க்கும் மேற்ப்பட்ட பாஜக தொண்டர்கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் முன்னிலையிலும், மேற்கு மண்டலம் சார்பில் மண்டல அமைப்பாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றியை தடைசெய்யவேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொது செயலாளர் விஎஸ்ஆர்.பிரபு, மாவட்ட செயலாளர்கள் ரவிசந்திரன், மான்சிங், ராஜீவ், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாநில ஓபிசி அணி செயலாளர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ், மேற்கு மண்டல பொது செயலாளர் முத்து பெரியநாயகம், லிங்க செல்வம், வணிகபிரிவு மாநில செயலாளர் பால பொய்சொல்லான், மாவட்ட துணை தலைவர் தங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் நாகராஜன், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News