அதிமுக உள்கட்சித்தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

Update: 2022-04-25 13:30 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தனது விருப்பம் செலுத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தேர்தல் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.கழக அமைப்புத் தேர்தல் நடத்தும் பொறுப்பாளர் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் மதுரைவீரன் முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாவட்ட கழக செயலாளர் விருப்ப மனுவை செலுத்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து எட்டயாபுரம் நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் திமுக வார்டு செயலாளர் ரத்தினம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திமுக இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,கோவில்பட்டி நகரச் செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி சத்யா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சீனிராஜ், அம்மா பேரவை நகர பொருளாளர் அம்பிகா வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காந்தி என்ற காமாட்சி ஒன்றியச் செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன்,அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News