முக கவசம் அணியாத 411 பேர் மீது நடவடிக்கை :- ரூ. 82,200/- பணம் அபராதம்.

தூத்துக்கு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதியை மீறிய 411 பேர் மீது நடவடிக்கை எடுத்து, ரூ 82,220 அபராதத்தினை வசூல் செய்தனர்.

Update: 2021-04-30 03:45 GMT

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக பரவி வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ. 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ. 500/- அபராதமும் விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வியாழக்கிழமையான நேற்று ஒரே நாளில் பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 38 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 10 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 39 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 38 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 85 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 100 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 69 பேர் மீதும் மற்றும் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 32 பேர் மீதும் என மொத்தம் 411 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 82,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளாத்தில் தலா ஒருவர் வீதம் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மொத்தம் 4 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 2000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News