தூத்துக்குடி அருகே 586 மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 586 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-05-07 12:13 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம் அருகே சட்ட விரோதமாக விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 586 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை, கடத்தல் போன்றவற்றை அறவே ஒழிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையிலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும், மாவட்ட அளவில் உதவி ஆய்வாளர் தலைமையிலும் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனின் மேற்பார்வையில் உள்ள தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் எட்டயபுரம் நாவலக்கம்பட்டி ரோட்டில் உள்ள மயான பகுதி அருகே சந்தேகத்திற்கிடமானமுறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.


விசாரணையில், அவர்கள் எட்டயாபுரம் நடுவிற்பட்டியைச் சேர்ந்த இசக்கி மாரிமுத்து (32), கோவில்பட்டியைச் சேர்ந்த முருகன் (53) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் முருகன் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


மேலும், கைதான இருவரிடம் இருந்த 586 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News