தூத்துக்குடியில் இதுவரை ரூ.1.21 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1 கோடியே 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-29 09:06 GMT

தூத்துக்குடி மாவட்த்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஒவ்வொரு தொகுதியிலும் 9 பறக்கும் படை மற்றும் 9 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் மட்டும் 15 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் முறையான ஆவணம் இன்றி கொண்டு வரக்கூடிய பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 101 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 642 மதிப்பிலான பொருட்கள், ரூ.5 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 750 மதிப்புள்ள போதை பொருட்கள், ரூ.99 ஆயிரத்து 310 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News