இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற 8 பேர் கைது

படகில் இலங்கைக்கு 2 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-21 11:39 GMT

தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.21 கோடி மதிப்பிலான 21 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலில் மிதந்ததை எடுத்து பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓராண்டுக்கு முன்பு மினிக்காய் தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடலில் மிதந்து வந்த பார்சலை எடுத்த சிலர் அதன் மதிப்பு தெரியாமல் கடந்த ஒன்றரை மாதத்தில் 7 கிலோ விற்பனை செய்துள்ளார். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரான்ச் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது.மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவை சேர்ந்த இருதய வாஸ், கிங் பேன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை 55 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதோடு கடத்தி விற்பனை செய்பவர்களையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News