ஒரே நாளில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

Update: 2021-03-05 12:15 GMT

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு படுகையூர் ரோடு பகுதியில் கடந்த பிப் 6 ம் தேதி அன்று முறப்பநாடு வடக்கு தெருவை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரது மகன் துரைபாண்டி (47) மற்றும் இவரது மகன் ராஜா (21) ஆகியோரை முன்விரோதம் காரணமாக சென்னல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த செல்வ விநாயகம் மகன் ரமேஷ் (22), ராமையா மகன் சண்முகசுந்தர் (23) மற்றும் அவரது நண்பர்களான சங்கரபாண்டி (19), சிவா ஆகியோர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ், சண்முகசுந்தர், சங்கரபாண்டி மற்றும் சிவா ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய எதிரிகளான ரமேஷ் மற்றும் சண்முகசுந்தர் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்.

அதன் பேரில் 2 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டருக்கு, எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News