ஆதிச்சநல்லூரில் 2 ம் கட்ட அகழாய்வு பணிகள்

Update: 2021-02-20 06:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த ஆண்டு மே 25-ம் தேதி தமிழக தொல்லியல் துறை சார்பில் முதல் கட்டமாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 4 மாதங்கள் நடைபெற்ற இப்பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பொருட்கள் கிடைத்தன.இந்நிலையில் 2ம் கட்ட அகழாய்வுக்கான ஆயத்தப் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு நடைபெறவுள்ள இடங்களில் உள்ள முட்செடிகளை வெட்டி சுத்தம் செய்யும் பணி நேற்று தொடங்கியது.

ஆதிச்சநல்லூர், கால்வாய், புளியங்குளம், வீரளப்பேரி ஆகியஇடங்களிலும், சிவகளையில் மூலக்கரை, பேட்மாநகரம், சிவகளை பரம்பு, செக்கடி, ஆவாரங்காடு திரடு, பொட்டல்கோட்டை திரடு, பேரூர் திரடு ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News