அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Update: 2021-03-15 11:15 GMT

ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ மோகன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று பிற்பகல், ஓட்டப்பிடாரம் உலகாண்டேஸ்வரி கோவில் முன்பிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டு ஓட்டப்பிடாரம் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் அலுவலர் செல்வநாயகத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கு வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வரவேற்பளித்தனர்.

Tags:    

Similar News