தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

Update: 2021-02-28 07:15 GMT

தூத்துக்குடியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட செஸ் அசோசியேசன் மற்றும் கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து 3வது கேவிஎஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் செஸ் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.போட்டிகளை கேவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் பாலமுருகன் தலைமையில் முதல்வர் சாந்திரோஜா துவக்கி வைத்தார். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி முககவசம் அணிந்து கலந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் மெலின்டா சுசன் தாமஸ், மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் கற்பகவள்ளி ஆகியோர் செய்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் கேவிஎஸ் பள்ளி முதல்வர் சாந்தி ரோஜா கூறுகையில், பள்ளி மாணவர்களிடம் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆப்லைன் முறையில் போட்டிகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News