தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி சுற்றுப்பயணம்

Update: 2021-02-19 07:15 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பிப்-20, 21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி கருணாநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக திமுக மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி தொகுதி எம்.பி கனிமொழி கருணாநிதி பிப்ரவரி 20 மற்றும் 21ஆகிய இரு தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.அதன்படி நாளை (20 ம் தேதி) சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி பாஸ்கரன் திருமண மண்டபத்தில் நடைபெறும் தியாகி பொன்னுச்சாமி வில்லவராயரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவரது நினைவு தபால் கவரை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

21 ம் தேதி காலை 9 மணிக்கு கோவில்பட்டி பாரதிநகரில் மகளிரின் சுய முன்னேற்றத்திற்காக நாப்கின் உற்பத்தி செய்ய தனது சொந்த செலவில் நாப்கின் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சியிலும், காலை 9.30 மணிக்கு கோவில்பட்டி நகரிலுள்ள வேலுச்சாமியின் முடித்திருத்தும் கடையில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும், காலை 10 மணிக்கு கோவில்பட்டி, சங்கரலிங்கபுரத்தில் கபடி விளையாடும் வீரா்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கபடி மேட் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞா் அரங்கில் 2021-சட்டமன்ற தோ்தலில் தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டர் அணியினா் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து மகளிரணியினருடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க இருக்கிறார். இரவு 6.30 மணிக்கு புதூா் மேற்கு ஒன்றியம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் கபடி விளையாட்டு வீரா்களுக்கு காலணி மற்றும் ஜொ்ஸி டி-சா்ட்டுகளை தனது சொந்த செலவில் வழங்கும் நிகழ்ச்சியிலும், இரவு 7 மணிக்கு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் தத்தனேரி கிராமததில் கபடி விளையாட்டு வீரா்களுக்கு தனது சொந்த செலவில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கபடி மேட் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.எனவே திமு கழக நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திட அன்புடன் அழைக்கிறேன் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News