தூத்துக்குடியில் சீட்பெல்ட் விழிப்புணர்வு பேரணி

Update: 2021-02-10 08:15 GMT

சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று, வட்டார போக்குவரத்து அலவலுலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விநாயகம் முன்னிலையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் கலந்து கொண்ட நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட்பெல்ட் அணிவதால் உயிரிழப்பை தடுக்கலாம் என்ற வகையில் சீட் பெல்ட் அணிந்து பங்கேற்றனர். பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி 3வது மைல், புதிய மாநகராட்சி வழியாக நகரின் முக்கிய சாலை வழியாக 4 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பீச்ரோடு மாதா கோவில் முன்பு நிறைவடைந்தது. இதில் போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், யெங் இந்தியா தலைவர் பொன்குமரன், உதவி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்‌ஸ், மணி மற்றும் கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News