பேரிடரில் பொதுமக்களை பாதுகாக்கும் ஆப்தமித்ரா

Update: 2021-01-23 11:45 GMT

பேரிடரின் போது மக்களை பாதுகாப்பதற்காக முதல் களப்பணியாளர்களை உருவாக்கும் வகையில் ஆப்தமித்ரா திட்டம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய இணை செயலாளர் ரமேஷ் குமார் ஹுடா தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இன்று பேரிடர் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி., ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆப்தமித்ரா திட்டம் பற்றிய விளக்க கையேட்டையும் அவர் வெளியிட்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், புயல் தொடர்மழை வெள்ளம் ஆகியவற்றின் போது பொது மக்களை பாதுகாப்பதற்காக முதல்நிலை களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும், தீவிரமாக களப்பணியாற்றி மக்களை காப்பாற்றும் வகையில் இவர்கள் செயல்படுவார்கள். ஆப்தமித்ரா என்ற இந்த திட்டம் தமிழகத்தில் 12 கடலோர மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் கொண்டு வரப்படவுள்ளது. இதற்காக சென்னை மற்றும் பிற இடங்களில் உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த திட்டமானது அடுத்த மாதம் தொடங்கப்படும் என்றார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா(திருச்செந்தூர்), மற்றும் கடலோர காவல் படையினர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News