மகளிர் தினத்தில் வெளியாகும் ‘ஜெ பேபி’ சினிமா படம்
Women Day Release Cinema குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி' படம் மகளிர் தினத்தில் வெளியாகிறது.;
Women Day Release Cinema
தமிழ் சினிமாக்களில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே காலம் காலமாக ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் கடந்த காலங்களில் எத்தனையோ சினிமாக்கள் இன்று வரை ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத படமாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வெளிவரும் படங்களில் ஒருசில படங்களில் கதையம்சம் இருந்தால் பாடல்கள் ஜொலிப்பதில்லை. பாடல்கள் ஜொலித்தால் கதையம்சம் இருப்பதில்லை.... இதுபோல் ஏக குளறுபடிகளால் ஒரு சில நல்ல படங்கள் கூட வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய்விடுகிறது.
அந்த வகையில் தற்காலத்தில் வெளிவரும் சினிமாக்களில் குடும்ப கதாபாத்திரங்கள் ஒன்றிய கதையம்சம் காண்பது அரிதாகிவிட்டது. ஆனாலும் அதனையும் மீறி ஒரு சில இயக்குனர்கள் நல்ல கதையம்ச படங்களை சிரமத்துடன் எடுத்து வெளியிட்டு வெற்றியையும் பெறுகின்றனர். அந்த வகையில் மார்ச் 8 ந்தேதி வெளியாக உள்ள இப்படம் வெற்றியைப்பெறுமா என எதிர்பார்த்து காத்துள்ளனர் ரசிகர்கள்....
பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி, தினேஷ், மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. 'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. 'ஜெ பேபி' படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.