விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!

விமானங்கள் தரையில் அதிவேகமாக சென்று உந்துசக்தி பெற்று மேலே பறக்கும். அபப்டி அதிவேகமாக செல்லும் விமானத்தின் டயர்கள் வெடித்தாலோ அல்லது பஞ்சர் ஆனாலோ என்ன ஆகும்..?;

Update: 2024-11-05 05:59 GMT

விமானத்தின் டயர்கள் -கோப்பு படம் 

விமானங்களின் டயர்கள் எப்பொழுதும் பஞ்சர் ஆகவோ, வெடிக்கவோ செய்யாது. இதற்கு காரணம் என்ன? வெடிக்காமல் இருப்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணம் என்ன ? அப்படி வெடிக்கலாம் இருந்தால் அந்த தொழிற்நுட்பம் ஏன் கார்களில் கொண்டுவரப்படவில்லை ? விமானங்களில் டயர்களும் கார்களின் டயர்களும் ஒன்றா? இரண்டிற்கும் என்ன வித்தியாசம் ?

அடடா.. இப்படி நீங்கள் கேட்கவேண்டிய அத்தனை கேள்விகளையும் நானே எழுப்பி உங்களுக்கு பதிலாக தரப்போகிறேன். சோ, படிக்க நீங்க ரெடியா..? அப்படின்னா நானும் சொல்வதற்கு ரெடியாய்ட்டேன்.

காரில் வேகமாக நெடுஞ்சாலையில் செல்லும் போது கூட காரின் டயர் பஞ்சராகியோ, அல்லது வெடித்தோ போயிருக்கும். எல்லோருக்கும் வாழ்வில் இப்படி ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். வேகமாக செல்லும்போது கார்களில் டயர் வெடித்து விட்டால் சிலவெளிகளில் கண்ட்ரோல் பண்ணமுடியாமல் விபத்துகள் ஏற்படலாம்.

கார்களின் வேகத்துக்கே இப்படியான விபத்து என்றால் விமானத்தின் டயர் வெடித்தால் அலலது பஞ்சர் ஆனால் என்ன ஆகும் என்று நம்மால் கற்பனை செய்தும் பார்க்கமுடியாது. விமானங்களில் சக்திமிகு எரிபொருள் பயன்படுத்தப்படுவதால் சிறிய உரசல் கூட தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.


ஆனால் பாருங்கள் விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்கள் மட்டும் பஞ்சராவதோ வெடிப்பதோ இல்லை.

பொதுவாக ஒவ்வொரு டயருக்கு அது வெளியிலிருந்து எவ்வளவு அழுத்தத்தைத் தாங்கும் திறன் கொண்டது என்ற ஒரு அளவீடு இருக்கும். அதை Psi எனக் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக ஒரு காரின் டயருக்கு 32-35 Psi இருக்கும். ஆனால் விமானங்களில் பயன்படுத்தப்படும் டயருக்கு 200 Psi இருக்கும். அதாவது கார்களை விட 6 மடங்கு அதிகமாக அழுத்தைத் தாங்கும் திறன் இருக்கும். விமானங்களில் டயரும் கிட்டத்தட்ட காரின் டயரைப் போலவே தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் இது அதிக எடை மற்றும் அதிக வேகத்தைத் தாங்கும் திறனைக்கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்படுகிறது.

பொதுவாக விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பெரிய டயர்கள் எல்லாம் இல்லை. போயிங் 737 விமானத்தின் டயர் 27X7.75 R15 என்ற அளவிலான டயர் தான் பொருத்தப்படுகிறது. ஒப்பிட்டுப்பார்த்தால் இது சிறிய டிரக் டயரின் அளவை விட சிறியது தான். சிறிய டிரக்குகளில் கூட 40 இன்ச் டயாமீட்டர், 20 இன்ச் அகலம் கொண்ட டயர்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானங்களில் அதை விடச் சிறிய டயராக பொருத்தப்பட்டிருந்தாலும், அதில் அதிக எடை மற்றும் வேகத்தை தாக்குபிடிக்கும் அளவிற்கு அதன் த்ரட்களுடன் நைலான் கார்டுகள் அல்லது சிந்தடிக் பாலிமர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் அதிக அழுத்தம் மட்டும் வேகத்தை தாக்குப்பிடிக்கும் அளவிற்கு இந்த டயர்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக விமானங்கள் தரையில் 270 கி.மீ வேகம் வரை பயணிக்கும் ஆனால் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள டயர்கள் 470 கி.மீ வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் பஞ்சர் ஆகாத டயர் 270 கி.மீ வேகத்தில் பயணிக்கும் போது பஞ்சர் ஆகாமல் இருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியம் இல்லை.

விமான டயர்களில் த்ரெட்கள் சிம்பிள் பேட்டனிலேயே இருக்கும். இது விமானங்கள் ஹைட்ரோ பிளானிங் ஏற்படுத்தாமல் தடுக்க உள்ளே த்ரெட்டிங் பேட்டர்ன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் விமானங்கள் தரையிறங்கும் போது தரையைத் தொடும் அந்த ஒரு விநாடி டயர் சுற்றத் துவங்கும் முன்பு புகை வரும். பின்னர் டயர் சுற்ற துவங்கியதும் இது சரியாகிவிடும்.

கமர்ஷியல் விமானங்களில் அதிகமான எடை காரணமாக அதிக வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பொதுவாக விமானங்களில் உள்ள டயர்கள் 500 முறை தரையிறங்கும் அளவில் பயன்படுத்த முடியும். அதன் பின் அந்த டயர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டுத் தேய்ந்து போன இடங்களைச் சரி செய்து மீண்டும் த்ரெட்டிங் செய்யப்படுகிறது. அதன் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகின்றன. அதன்பிறகே அந்த டயர்கள் மீண்டும் விமானங்களில் பயன்படுத்தப்படும்.

Tags:    

Similar News