மதுரை எய்ம்ஸ் ஏன் தாமதம்? பாஜக ஐ.டி. விங்க் கூறுவது சரியா
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை தமிழக அரசுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுத்து வருகின்றன;
இது பற்றி பா.ஜ.க ஆதரவு சமூக வலைதளங்களில் வெளியான செய்தி... இன்ஸ்டா நியூஸ் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றி தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
செய்தி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மோடி சென்ற ஆட்சியில் அடிக்கல் நாட்டினார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்து 20 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஏன் இன்னும் முடிக்கப்படவில்லை? மத்திய அரசு என்ன செய்கிறது? ஏன் இந்த தாமதம்?
மத்திய அரசின் பணி என்பது அதற்கான திட்ட பணிகளை அனுமதிப்பது, அதில் மத்திய அரசின் பங்கீடான நிதியை ஒதுக்கீடு செய்வது தான் முக்கியம். அப்படியெனில் அந்த நிதியை பயன்படுத்தி அதற்கான இடத்தை கட்டிடங்களை, தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவது மாநில அரசின் வேலை. மத்திய அரசு அதன் நிதி ஒதுக்கீட்டை மாநில அரசின் வேலைக்கு ஏற்பவே செட்டில் செய்யும். ஆனால் மத்திய அரசு அதற்கு முன்கூட்டியே அதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்து விட்டது.
அதைத்தான் பாஜக தலைவர் நட்டா 90% மத்திய அரசின் பணிகள் முடிந்து விட்டது என்று. ஆனால் 90% பணி முடிந்தால் ஏன் வெற்றிடம் என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் அதில் என்ன வித்தியாசம் என்று கூட தெரியாத பலர் இது பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சரி, இருக்கட்டும். ஏன் அந்த தாமதம்? கட்டடங்கள் கட்டினால் அதனால் மாநில அரசுக்கு அதன் மூலம் நல்ல பலன் தானே, அப்போதும் ஏன் செய்ய மறுக்கிறது? அப்படியெனில் அதை விட ஏதோ லாபம் இருக்க வேண்டும் அல்லவா? அது என்ன? எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு வந்தால் அதனால் மக்கள் பயனடைவார்கள். ஆனால் இங்கிருக்கும் மருத்துவமனைகள்? இன்று பள்ளிகளும், மருத்துவமனைகளும் பணம் சம்பாதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மக்களை பயமுறுத்தி கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள். உதாரணமாக ஒருவருக்கு மோசமான நோய் இருக்கிறது, அல்லது Open Heart Surgery செய்யவேண்டும் என்று சொன்னால், மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் சொன்னதை கேட்கத்தான் வேண்டும்.
நாளை எய்ம்ஸ் மருத்துவமனை இருக்கிறது என்றால் அதில் செகண்ட் ஒபீனியன் வாங்கிக் கொள்ளலாம் என்று அங்கே போனால் 80% அறுவை சிகிச்சைகள் தேவையற்றது என்று சொல்வார்கள். அப்படியெனில் பாதிக்கபடப்போவது யார்? தனியார் மருத்துவமனைகள்தானே? அப்போது அவர்கள் இதை கொண்டுவர அனுமதிப்பார்களா?
மருத்துவமனைகள் வழங்கும், கோடிக்கணக்கான பணம் ஆளும் கட்சிக்கும், ஏன் எதிர் கட்சிக்கும் கூட செல்கிறது. அதனால் அவர்கள் அந்த கட்டுமான பணிகளை காலவரயரையின்றி காலதாமதம் செய்கிறார்கள். அதன் மூலம் இந்த பணி தள்ளிப்போடும் வரையில் இங்கிருக்கும் மருத்துவமனைகள் கொள்ளை தொடரும், அதில் ஒரு பங்கு ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் வரும் எனும்போது அதை அவர்கள் இழக்க விரும்புவார்களா?
இன்னும் ஒரு கூடுதல் செய்தி! நான் ஒரு இப்போது நெஞ்சு வலிக்கிறது என்றால், மருத்துவர்கள் ஓபன் ஹார்ட் சர்ஜரி, அல்லது குறைந்த பட்சம் அடைப்பு இருப்பதாக் ஆஞ்சியோ செய்ய சொல்வார்கள்.
ஆனால் 50 வருடங்களை தாண்டிய ஒருவருக்கு, இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், நம் இதயமே அதுவாக பைபாஸ் செய்து கொள்ளும் திறன் வாய்ந்தது. அதில் Non vulnerable blocks என்று சொல்லப்படும் அடைப்புகள் அதுவாக சரியாகி விடும். சில நேரங்களில் அதற்கான தாக்கம் இருக்கும். Vulnerable blocks என்று சொல்லப்படும் மூளை, நுரையீரலுக்கும் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், அதில் 90% யாராலும் காப்பாற்ற முடியாது. ICU வில் வேலை பார்க்கும் டாக்டர், நர்ஸ்களுக்கு இந்த அடைப்பு வந்தால், அவர்களை காப்பாற்றுவதற்கு 20% வாய்ப்புகள் இருக்குமா என்பது சந்தேகம்.
எனவே, இது போன்ற பல நோய்களுக்கு கொடுக்கும் மருத்துவம், தேவையற்றது. உங்களை பயமுறுத்தி, வீடு, காடுகளை விற்கவைத்து சம்பாதிப்பது தான் இன்று மருத்துவமனைகளில் வேலை . அதற்கு துணைபோகும் திராவிட கட்சிகளுக்கு அதற்கான பங்கு வருகிறது. அப்படி இருக்க அவர்கள் AIIMS வர அனுமதிப்பார்களா? யோசியுங்கள்! அண்ணாமலை இதற்காக போராட வேண்டும்! இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி பா.ஜ., ஆதரவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தாலும், இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது மறுப்பு வருமா? என காத்திருந்து பார்க்கலாம்.