தேனி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்வு
தேனி தமிழ் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;
தேனி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தேர்வு (கோப்பு படம்)
தேனி, பழைய பேருந்து நிலையத்திலுள்ள வசந்தம் தங்கும் விடுதியில் நடைபெற்ற தேனி தமிழ்ச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேனி சுப்பிரமணி தலைமையிலும் செயலாளர் பொன்முடி முன்னிலையிலும் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், பொறியாளர் பொன்முடி தலைவராகவும், எழுத்தாளர் தேனி சுப்பிரமணி செயலாளராகவும், முகமது பாட்சா பொருளாளராகவும், பாண்டியராஜ் துணைத்தலைவராகவும், ரேணுகாதேவி மற்றும் முருகேசன் துணைச்செயலாளர்களாகவும், தாமோதரன், கண்ணன், அய்யப்பன், எழிலன்பன், ஜவஹர் ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சங்கத்தின் தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்குகளை அங்கீகரித்தல், சங்கப் பதிவினைப் புதுப்பித்தல், புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வினை ஏற்றுக் கொள்ளுதல், புதிய உறுப்பினர் சேர்க்கையினை அனுமதித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தூயதமிழ்ப் பற்றாளர் விருது பெற்ற தேனி மு. சுப்பிரமணி பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார்.