தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று

தேனி மருத்துவக் கல்லுாரியில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவி்ல்லை.

Update: 2021-12-26 03:45 GMT

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கொரோனா பரிசோதனைகளில் தொடர்ச்சியாக 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று (யாருக்கும் இல்லை) பதிவாகி உள்ளது. இந்த 10 நாட்களில் இரண்டு பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களும் தனியார் மருத்துவமனையில் கண்டறியப்பட்டவர்கள். நேற்று 252 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லுாரி கொரோனா வார்டில் 2 பேர் கொரோனாவிற்காகவும், ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் வைரஸ் பரவினால் சிகிச்சை அளிக்க 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மருந்து மாத்திரைகளும் போதிய அளவு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News