தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!

தேனி சமதர்மபுரம் நாடார்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடந்தது.

Update: 2024-05-17 07:03 GMT

தேனி சமதர்மபுரம் பத்திரகாளியம்மன் கோயில் மண்டகப்படியின் போது குத்துவிளக்கு பூஜை நடந்தது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான பத்திரகாளியம்மன் கோயில் விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் போது, ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் நாடார் உறவின்முறை சார்பில், மண்டகப்படி திருவிழா நடப்பது வழக்கம்.

இதன் ஒரு பகுதியாக தேனி சமதர்மபுரம் நாடார்கள் முன்னேற்ற சங்கத்தின் மண்டகப்படி திருவிழா நடந்தது. காலை 7 மணிக்கு அம்மன் அழைப்பு நடந்தது. அம்மன் மண்டகப்படிக்கு வந்ததும், அன்னதானம் தொடங்கியது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி தலைமையில், தலைமை நிர்வாகிகள் அத்தனை பேரும் பங்கேற்றனர்.


தொடர்ந்து குத்துவிளக்கு பூஜைகளும் நடந்தன. விளையாட்டுப்போட்டிகள், பெண்களுக்கான கோலப்போட்டிகள், விளக்கு பூஜை, சிறுவர்களுக்கான ஆடல், பாடல், பரிசுகள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. தலைவர் மருதபாண்டி, செயலாளர் தவமணி, பொருளாளர் அய்யப்பன், துணை பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் கே.கே.ஜெயராமன் நாடார், துணைச் செயலாளர்கள் ராமர், பழனிவேல்ராஜன், முக்கிய பிரமுகர்கள் புளிக்கொட்டறை முருகதாஸ், உட்பட பலர் பங்கேற்றனர்.   

Tags:    

Similar News