தேனி மாவட்டத்தில் இன்றும் கொரோனா பாதிப்பு இல்லை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.;

Update: 2021-11-06 06:00 GMT

கோப்பு படம் 

தேனி மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஆனால் மாவட்டத்தில் பரவலாக சளி, காய்ச்சல் பரவி வருகிறது.

தேனி மாவட்டத்தில் இந்த மாதத்தில் நான்காவது முறையாக (தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக) யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதனால் சுகாதாரத்துறைக்கு நிம்மதி ஏற்படவில்லை. மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால் கொசுத்தொல்லை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இரவில் மிகவும் குளிர்ச்சியான பருவநிலை நிலவுவதால் சளி, காய்ச்சல் பிரச்னை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரியவர்களில் பலருக்கு கடும் காய்ச்சலும், சளியும் காணப்படுகிறது. சிலருக்கு உடல் வலியுடன் உள்ள காய்ச்சல் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News