தேனியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தேனி சின்னமனுாரில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-24 09:00 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுாரில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.,) சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை தொடங்கிய சோதனை மற்றும் விசாரணை தற்போது வரை தொடர்கிறது.

தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.,) போலீஸ் அதிகாரிகள் மதுரை, கன்னியாகுமரி களக்காடு, தேனி சின்னமனுார் ஆகிய இடங்களில் இன்று காலை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சின்னமனுாரில் பள்ளிவாசல் எதிரே உள்ள வடக்கு தெருவில் அமைந்திருக்கும் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் சோதனை நடக்கிறது. என்.ஐ.ஏ., டி.எஸ்.பி., ரோஜியா, இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மதுரையில் உள்ள பிரிவினைவாத சக்திகளுடன் யூசுப் அஸ்லாமுக்கு தொடர்பு உள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடக்கிறது.

இவரது வீட்டில் இருந்து மொபைல் போன், சிம்கார்டுகள், துண்டு பிரசுரங்கள், லேப்டாப் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News