தேசியக்கொடியை ஏற்றியது மட்டும் அல்ல, இறக்குவது எப்படி தெரியுமா?
தேசியக்கொடியை ஏற்றியது மட்டும் அல்ல, இறக்குவது எப்படி தெரியுமா? என்பது பற்றி அறிய கீழே படியுங்கள்.;
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடியின் அழைப்பால் மக்கள் அனைவரும் மூவர்ணக் கொடியை ஏற்றி இருக்கிறார்கள். சந்தோசம். அதே நேரத்தில் மோடிஜியின் இந்த அழைப்பால் தான் தேசியக்கொடியை மக்கள் அவமதித்துவிட்டார்கள் என்று நிரூபிக்கும் வகையில் அதுபோன்ற மூவர்ணக் கொடியை படம் பிடித்து வீடியோக்களை உருவாக்க பலர் ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்ல, ஆகஸ்ட் 16ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மூவர்ணக் கொடியை தலைகீழாக கட்டுவது, குப்பையில் வீசுவது, சேற்றில் கறை படிந்திருப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கவும், படம் பிடிக்கவும் இவர்கள் முயற்சிப்பார்கள். நமது வீட்டில் தனது தாய் குளித்து விட்டு வரும்போது வழுக்கி அலங்கோலமாக விழுந்து கிடந்தால், உடனே அவரது ஆடையை சரிசெய்து தூக்கிவிடுவது , தேவைப்பட்டால் மருத்துவமனை கொண்டு செல்வது மானமுள்ள மனிதரின் செயல். ஆனால் அலங்கோலத்தை படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றுபவர்கள் அந்த தாயின் மகனாக கண்டிப்பாக இருக்க மாட்டார்கள் என்பது மட்டும் அல்ல. வக்கிரமான மனநிலை கொண்டவர்களும் கூட. எனவே எங்காவது தவறுதலாக தேசியக் கொடி காற்றில் பறந்து கீழே விழுந்திருந்தால், தேசபக்தர்கள், அதை எடுத்து பத்திரப்படுத்துங்கள். தேசவிரோதிகள் தங்களது விமர்சிக்க வாய்ப்பளிக்காதீர்கள்.
இந்த பதிவின் மூலம் எனது நட்புக்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று தேதிகளில் தங்களது வீட்டு மாடியில் கொடி ஏற்றிய பின், மரியாதையுடன் கழற்றி, ஆகஸ்டு 16-ம் தேதி சரியாக மடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அலமாரியில் / பிரீஃப்கேஸில் / பெட்டியில் பத்திரப் படுத்துங்கள். இதனால் அதே கொடியை எதிர்காலத்தில் மற்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தலாம். தேச விரோதிகளுக்கு விரல் நீட்ட வாய்ப்பளித்துவிடக் கூடாது.