தற்கொலை முடிவை சூசகமாக அறிவிக்க சமூக வலைத்தளமா கிடைத்தது?

மத்திய அரசு பணியில் இருந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலை முடிவினை சமூக வலைத்தளத்தில் சூசகமாக அறிவித்து நிறைவேற்றியுள்ளார்.

Update: 2022-08-15 06:33 GMT

மத்திய அரசு பணியில் இருந்த ஒரு வாலிபர், தனது சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்தார். பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்த இவர், போட்டித்தேர்வுகள் எழுதி மத்திய அரசு பணியில் சேர்ந்தார். இந்நிலையில் பாட்டியும் இறந்து விட, தனிமை அந்த வாலிபரை வாட்டியது. திருமணம் செய்து வைக்க கூட ஆள் இல்லை.

கை நிறைய சம்பளம் கிடைத்தும், தனியை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். தனது இந்த முடிவினை அவர் சமூக வலைதளங்கள் மூலம் தன் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் வெளிப்படையாக சொல்லாமல், சூசகமாக அறிவித்ததால், நண்பர்கள் எப்போதும் போல் தத்துவம் பேசுகிறான் என்ற நினைத்து விட்டனர்.

தனது வாட்சாப் ஸ்டேட்டசில், கல்லறையில் எனக்கு இடம் உண்டு, நான் நிரந்தர இன்பம் தேடப்போகிறேன் என விரக்தியும், தத்துவமும் கலந்த பதிவுகளை தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக பதிவிட்டு வந்துள்ளார். இதனை பார்த்த இவரது நண்பர்களும், அவருக்கு ஆறுதல் சொல்லும் வகையில், சில பதிவுகளை பகிர்ந்துள்ளனர். ஆனால் யாருக்கும் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்ற சிந்தனை தோன்றவில்லை. அப்படி ஒரு சந்தேகம் வராத அளவுக்கு தனது பதிவுகளை துல்லியமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் திடீரென அவர் தனது அறையில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் அறிந்து நண்பர்கள் அத்தனை பேரும் நிலைகுலைந்து போய் உள்ளனர். தனிமை தான் அவரை இந்த முடிவு எடுக்க வைத்திருக்கலாம். அவர் காதலில் தோற்றாரா? என்பது கூட உறுதியாக தெரியவில்லை என நண்பர்கள் விரக்தியுடன் கூறுகின்றனர். நண்பனை இழந்து விட்டோமே  என்பதை விட, அவன் சூசகமாக தெரிவித்தும் நாங்கள் கவனக்குறைவாக இருந்து அவரை தவற விட்டு விட்டோம் என தற்போது அந்த வாலிபரின் நண்பர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.

Tags:    

Similar News