இன்ஸ்டாநியூஸ் சொன்னது போல் தேனி அருகே போடி மெட்டில் பாறைகள் சரிந்தன

போடி மெட்டு ரோட்டோரம் பாறைகள் சரியும் அபாயம் உள்ளது என இன்ஸ்டா நியூஸ் சுட்டிக்காட்டியது போல் பாறைகள் சரிந்து விழுந்தன.

Update: 2022-05-18 05:00 GMT

போடி மெட்டு ரோட்டோரம் சரி்நது விழுந்த பாறைகள்.

போடி- மூணாறு வழித்தடத்தில் போடியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ளது போடி மெட்டு. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 644 அடி உயரத்தில் உள்ளது.  இந்த போடி மெட்டு செல்வதற்கு  17 கொண்டை ஊசி வளைவுகளை கடக்க வேண்டும். இந்த ரோட்டை 18 அடியில் இருந்து 24 அடியாக அகலப்படுத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை அரைகுறையாக செய்துள்ளனர்.

ரோட்டோரம் செதுக்கிய பாறைகள் எந்த நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. இது குறித்து இன்ஸ்டாநியூஸ் செய்தி தளம் சுட்டிக்காட்டியது. இந்நிலையில் போடி மெட்டு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த சாரல் மழைக்கே பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் பாறைகள் சரிந்து விழுவது தொடர்கதையானால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பெரிய விபரீதங்களும் ஏற்பட வாய்ப்புகள்  உள்ளன. அவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படுவதற்கு முன்னர் நெடுஞ்சாலைத்துறையினர் மலைச் சரிவுகளில் சீரமைக்கப்படாத பாறை பகுதிகளை சீரமைக்க வேண்டும். அதுவே இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

Tags:    

Similar News