2024 லோக்சபா தேர்தலில்.... அதிமுக நிலைமையை பாருங்க.....

2024 ADMK Position எம்ஜிஆர் என்ற மாமனிதர் தோற்றுவித்த மாபெரும் இயக்கம் தான் அதிமுக.;

Update: 2024-03-19 18:20 GMT
2024 லோக்சபா தேர்தலில்....  அதிமுக நிலைமையை பாருங்க.....
  • whatsapp icon

2024 ADMK Position

எம்ஜிஆர்  உயிரோடு இருந்த வரை ஒரே ஒரு தேர்தலில் தான் இரட்டை இலை வீழ்ந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா கட்சி தலைமை ஏற்றபின் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. ஆனாலும் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏதுமில்லை.

ஆனால் இன்றைய அதிமுகவின் நிலை பரிதாபகரமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தல் திருவிழாவில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் காண்கின்றன. ஆனால் அதிமுக பரிதாபகரமாக தனித்து விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிமுக பல பிரிவுகளாக சிதறுண்டு கிடக்கிறது. இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா என்று பல பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் தேர்தல் களத்தில் டிடிவி, சசிகலா அணியினர் போட்டியிட போவதில்லை என்றே தெரிகிறது. ஓபிஎஸ் கட்சி சின்னத்தை முடக்கி இபிஎஸ்க்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று நினைத்தார். அதற்காக கோவில் கோவிலாக போய் வேண்டிக் கொண்டார். இருந்தும் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. பாஜகவின் கொத்தடிமை ஆக அவர்கள் பின்னே நிற்க வேண்டிய பரிதாபத்தில் இருக்கிறார்.

இந்தத் தேர்தலில் ஓபிஎஸ் உடன் வேறு பெரிய அரசியல் கட்சி எதுவும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரையாம். அந்தக் கதையாக தேமுதிக உடன் வரலாம். இந்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கு செலவு செய்வதற்கு பணம் பெரும் பிரச்சனையாக இருக்கும். வேட்பாளர்கள் சொந்த காசை வாரி இறைக்க மாட்டார்கள். கட்சித் தலைமையும் பெரிய அளவில் பணம் கொடுக்க இயலாது. எனவே திமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே இவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இபிஎஸ் அணியை விட்டு மேலும் பல தலைவர்கள் ஏதேதோ காரணம் கூறி வெளியேறி விடுவார்கள். அதன்பின் இபிஎஸ் அணியும் ஒரு தேமுதிகவாக மாறிவிடும். அதிமுக பல பிரிவுகளாக சிதறி காணாமல் போய் விடலாம்.

Tags:    

Similar News