தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று மீண்டும் தடுப்பூசி பணி தொடங்கியது

தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

Update: 2021-07-21 02:49 GMT

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநகராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் அளவுகள் குறைவாக இருப்பதால் முதலில் வரும் பொதுமக்களுக்கு மட்டுமே தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

இதேபோல் இன்று மாநகராட்சி சார்பில் எட்டு இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா அரங்கத்தில் 400 நபர்களுக்கும், கரந்தை மாநகராட்சி பள்ளி 100 நபர்களுக்கும், வண்டிக்காரத் தெரு பள்ளியில் 150 நபர்களுக்கும், அண்ணாநகர் பள்ளியில் 150 நபர்களுக்கு என மொத்தம் எட்டு மையங்களில் 1,300 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுவதாகவும், எனவே முதலில் வரும் நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில்  இன்று அனைத்து மையங்களிலும், கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது. கோவாசின்  தடுப்பூசி போடவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News