பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யப்படும்.

Update: 2023-12-30 14:45 GMT

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்(பைல் படம்)

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் கூடிய உற்பத்தி விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார ரீதியாக மேம்படுத்த பசுமை தொழில் முளைனவோர்களை ஊக்கப்படுத்தும்‘பசுமை தொழில் முனைவு திட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை நிறுவனங்களை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில், தொழில் முனைவோர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM/NRLM) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் நிறுவனம் தொடங்கி ஓராண்டிற்கு மேல் தொடர் செயல்பாட்டில் இருக்க வேண்டும். நிறுவனம் கட்டாயம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் (MSME/Udhyog Aadhar) அங்கீகாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பதிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நிறுவனமானது குறைந்தபட்சம் 3 வேலையாட்களை கொண்டு செயல்படக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். தொழில் நிறுவனம்  GEM  இணையத் தளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.4.00 இலட்சமாக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக்கு உட்படுத்தப்பட்ட வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு தொழில் நிறுவனங்களால் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விருப்பமுள்ளோர் 05.01.2024 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குநர், மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை பெற்று விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்டவாறு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தலா ரூ.4,00,000ஃ- (ரூபாய் நான்கு இலட்சம் மட்டும்) மூன்று கட்டங்களாக தொழில் வளர்ச்சி நிதியாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தீபக் ஜேக்கப்  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News