கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

Update: 2021-06-08 10:15 GMT

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குறுவை சாகுபடி பயிர் கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை, திருவாருர் நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டுறவுத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், பெரியசாமி நியாய விலைக் கடைகளில் தரம் இல்லாத அரிசி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர்.

சிறு குறு விவசாயிகள் என பாகுபாடு இன்றி அனைவரையும் உறுப்பினராக்கி பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது முறைகேடு வந்தால் அதன் அடிப்படையில் நிர்வாகிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன் வழங்க 11 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News