தஞ்சை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம்: முன்னாள் மாணவர்கள் வழங்கல்

1980-இல் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது

Update: 2021-09-12 16:43 GMT

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் மாணவர்களால் ரூ. 1 கோடியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 50 ஆண்டுகால சேவையைப் போற்றும் வகையிலும், கொரோனா பேரிடர் காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்ததை போற்றும் வகையில், 1980-ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்ற மாணவர்கள் சார்பில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கலன் வழங்கப்பட்டது.

இதில் செலவில்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன், கட்டிடம், மின் இணைப்பு, மேலும் 2021 -ஆம் ஆண்டு பராமரிப்பு செலவு என அனைத்தும் சேர்த்து ரூ.1 கோடிக்கான செலவினங்களை மாணவர்களே ஏற்று கல்லூரிக்கு அர்ப்பணித்தனர். இதனை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் இன்று  தொடங்கி வைத்து மருத்துவமனை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

Tags:    

Similar News