தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது

தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று ஆணையாளர் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-26 02:18 GMT

தஞ்சாவூர் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் என மாவட்டம் முழுவதும் 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. குறிப்பாக, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட, 52 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு, தடுப்பூசியின் கையிருப்பை பொறுத்து சிறப்பு முகாம்  மூலம், தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கோவாக்ஷீன் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், அனைத்து மையங்குளிலும் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவாதாகவும், மீண்டும் மாநகராட்சிக்கு, தடுப்பூசி ஒதுக்கீடு செய்த பின் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News