இராமேஸ்வரத்தில் சுனாமி ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு இராமேஸ்வரத்தில் 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-26 16:15 GMT
சுனாமி பதினேழாம் ஆண்டு நினைவு நினைவு நாளையொட்டி இராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடல் அன்னையை வணங்கினார்கள்.

சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு 17 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நடைபெற்றது.  தமிழ்நாடு மீனவர் பேரவை இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் அதன் தலைவர் பிரிண்சோ ரைமன்ட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதே போல தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் பாம்பன் வடக்கு கடற்கரையில் அதன் தலைவர் சின்னதம்பி  தலைமையில் மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் ஏராளமானோர் சுனாமிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களை நினைவு கூறும் வகையிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மீண்டும் கோபம் கொண்டு எங்களை அழித்துவிடாதே என்று கடல் தாயிடம் வேண்டிக்கொண்டனர். மேலும் கடல் வளம் காப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

Similar News