கோயில்களில் டிச 27 ல் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம்

இராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கையில் நடராஜனருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது

Update: 2023-12-26 09:45 GMT

அருள்மிகு நடராஜர்.

சிவன் கோயில்களில் டிசம்பர் 27 ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிவ, ஆலயங்களில் டிசம்பர் 27ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும். திருவாதிரை முன்னிட்டு, ஆண்டுதோறும் சிவாலயங்களில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, தீபாராதனை, அர்ச்சனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில், டிசம்பர் 27-ம் புதன்கிழமை அதிகாலை 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன அபிஷேகங்கள் நடராஜருக்கு நடைபெறுகிறது. அதேபோல, மதுரை அருகே உள்ள திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாதர் சுவாமி ஆலயம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில், புதன்கிழமை காலை 5 மணி அளவில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,கோ பூஜை, நடராஜருக்கு சிறப்பு அர்ச்சனை, அலங்காரம், தீபாராதனை போன்றவைகள் நடைபெறும். கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி.பூபதி முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம்.வி. எம். மணி, கவுன்சிலர்கள் டாக்டர் மருதுபாண்டியன், வள்ளி மயில் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இதே போல ,மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ,இம்மையில் நன்மை தருவார் ஆலயம், தெப்பக்குளம் முத்தீஸ்வரர் திருக் கோயில், மதுரை அண்ணா நகர் சர்வேஸ் வரஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேச திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News