Ramanathapuram News ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த இன்றைய முக்கிய செய்திகள் என்ன?....

Ramanathapuram News ராமநாதபுரத்தில் நடந்த முக்கிய செய்திகள் என்னென்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.

Update: 2023-12-15 12:29 GMT

Ramanathapuram News

சித்திரங்குடி கண்மாய் நீரை பயன்படுத்த

அதிகாரிகள் எதிர்ப்பு:விவசாயிகள் கலெக்டரிடம்புகார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கண்மாய் நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த விடாமல் அதிகாரிகள் தடுப்பதாகபொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார்அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்துாரை அடுத்த சித்திரங்குடியில் பொதுப்பணித்துறை வனத்துறை கட்டுப்பாட்டில் இருநுாறு ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கண்மாயானாது நீர் கோள அடிப்படையில் பறவைகள் வாழ்வதற்கு சாதகமான தகவமைப்பைப் பெற்றுள்ளதால் ஆண்டு தோறும் நவம்பர்மாதம் துவங்கி ஜனவரி மாதம் வரை வெளிமாநில, வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.

இதனால் இந்த கண்மாயினை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த கண்மாயை நம்பி 300 ஏக்கர்விவசாய நிலம் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இந்த கண்மாயைத் துார்வாரி பல வருடங்கள் ஆவதால் சிறிதளவு தண்ணீர் வந்தாலும் கண்மாய் நிரம்பிவிடுவதால் தண்ணீரைத் தேக்க முடியாத நிலையே தொடர்கிறது. இதனால் அதிகாரிகள் பாசன வசதிக்காக தண்ணீரைத் திறந்துவிட எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விவசாயிகள் விவசாய பணி இல்லாததால் வெளியூர்களுக்கு வேறு வேலைக்கு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகமானது போதிய கண்மாயை விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக அளவீடு செய்து ஒதுக்கித்தரவேண்டும் என மக்கள் தொடர்பு முகாமில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நடந்து சென்றவரிடம் செல்போன் பணம் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் பகுதியில் நடந்து சென்றவரிடம் டூவீலரில் வந்த இரு நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் இரண்டாயிரம்ரூபாயை பறித்துசென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கிளியனேந்தல் பகுதியினைச் சேர்ந்தவர் மலைச்சாமி என்பவருடைய மகன் பிரசாத் (30).இவரது மனைவிக்கு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்ததைப் பார்ப்பதற்காக வந்த பிரசாத்திடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியைக் காட்டி மிரட்டினர். இதனால் பயந்து போன பிரசாத்திடம் இருந்து செல்போன் மற்றும் இரண்டாயிரம் ரூபாயை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து பார்த்தீபனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதுகுளத்துாரில் 1285 பேருக்கு

வீட்டுமனை :அமைச்சர் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் 1285 பேருக்கு இ-பட்டாவினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர். எஸ் .ராஜகண்ணப்பன் பயனாளிகளுக்குவழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைகள் (இ-பட்டா) வழங்கும் நிகழ்ச்சியானது கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கமுதி, முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி வட்டங்களைச் சார்ந்த 1285 பயனாளிகளுக்கு ரூ. 3.21 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைகளுக்கான (இ-பட்டா)பட்டாக்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி சப்கலெக்டர் அப்தாப் ரசூல், முதுகுளத்துார் பேரூராட்சித்தலைவர் ஷாஜஹான், தாசில்தார்கள் சடையாண்டி, சேதுராமன், ரங்கராஜன், ரவி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News